பொருட்கள் அல்லது சேவைகளின் விலைகள் உயரும் விகிதத்தைக் குறிக்கும் பணவீக்கம், ஒவ்வொரு தனி நபருக்கும் வேறுபடும். இதன் காரணம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட நுகர்வு முறையும் வெவ்வேறாக இருப்பதாகும். ஒவ்வொரு மாதமும், இந்திய புள்ளியியல் அமைச்சகம் நுகர்வோர் விலைக் குறியீட்டை (Consumer Price Index - CPI) வெளியிடுகிறது. இது நாடு முழுவதற்குமான பணவீக்கத்தின் அளவினைச் சொல்லும்.
நீங்கள் உணவு, உடை, வீடு ஆகியவற்றுக்கு எவ்வளவு செலவிடுகிறீர்கள் என்பதைக் கணக்கிட உதவும் கால்குலேட்டரை இங்கே கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் விலைகள் எவ்வளவு உயர்ந்திருக்கின்றன என்பதைக் காட்டும்.
இந்த மாதம் செலவு செய்ய உங்களிடம் 1000 ரூபாய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வாங்க வேண்டிய பொருட்களை வாங்க அதனை எப்படி வகுப்பீர்கள்?
ஸ்லைடரை பயன்படுத்தவும் அல்லது எண்களை உள்ளீடு செய்யவும்
இதுவரையிலான பிரிவுகளின் அடிப்படையில் உங்கள் தனிநபர் பணவீக்க விகிதம்:
சராசரி இந்திய பணவீக்கத்தினும் {number}
உங்கள் மாதாந்திர செலவின் மதிப்பிடப்பட்ட அதிகரிப்பு
இந்தக் கால்குலேட்டர், 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டைத் துவக்கப்புள்ளியாகப் பயன்படுத்துகிறது. உங்கள் கூடையில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய எடையும் பணவீக்க விகிதமும் இருக்கும்.
நீங்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட பிரிவிலும் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை உள்ளீடு செய்யும் போதும், இந்தக் கால்குலேட்டர் அப்பிரிவுக்கான எடையை மாற்றி, ஒரு சராசரி இந்தியரைவிடவும் நீங்கள் எவ்வளவு அதிகமாக அல்லது குறைவாக செலவு செய்கிறீர்கள் என்பதன் அடிப்படையில், உங்களுடைய பணவீக்க விகிதத்தைக் கணக்கிடும்.
வாசகங்கள் மற்றும் தயாரிப்பு - ஷதாப் நஸ்மி, வடிவமைப்பு மற்றும் படங்கள் - லோகேஷ், தரவுப் பகுப்பாய்வு - தஸீன் பதான், படங்கள்- புனீத் பர்னாலா, மற்றும் மேம்படுத்துதல் - மேத்யூ டெய்லர், மார்கோஸ் குர்கல், காவேரி பிஸ்வாஸ் மற்றும் ஜெரினா ஜேக்கப்.