நமது தொலைபேசிகளில் உள்ள காலநிலை மாற்றத்திற்கு உதவக்கூடிய கனிமங்கள்

காலநிலை மாற்றத்திற்கு காரணமான எண்ணெய் வள சார்பிலிருந்து இந்த உலகம் எப்போது மீளும்?

இதற்கான விடை உங்கள் பாக்கெட்டில் உள்ளது

நமது மொபைல்ஃபோனை உருவாக்க பயன்படும் முக்கிய கனிமங்களை பயன்படுத்தி பசுமை ஆற்றல்களான சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்திகளை உருவாக்கி நாம் அன்றாடம் பயன்படுத்த முடியும்.

கீழே ஸ்க்ரால் செய்து, உங்கள் பாக்கெட்டில் உள்ள எந்த கனிமம் எதற்கு பயன்படுகிறது என அறிந்து கொள்ளுங்கள்

திரை, மைக்ரோ சிப்ஸ், கேபிள்கள் மற்றும் பேட்டரி உள்ளிட்ட அதன் பாகங்களைக் காட்ட மொபைல்ஃபோன் விரிவடைந்தது.

திரை, மைக்ரோ சிப்ஸ், கேபிள்கள் மற்றும் பேட்டரி உள்ளிட்ட அதன் பாகங்களைக் காட்ட மொபைல்ஃபோன் விரிவடைந்தது.

உங்கள் பொபைல்ஃபோனை பிரித்து பார்த்தால், அதனுள் நீங்கள் பார்க்கும் பாகங்கள் இவைதான்.

அதை இயக்க தேவைப்படும் பேட்டரியில் பயன்படுத்தும் கனிமங்கள் இவைதான். பேட்டரியில் நிக்கல், லித்தியம் மற்றும் கோபால்ட் ஆகிய கனிமங்கள் உள்ளன.

இந்த கனிமங்கள் நமது வீடு, மின்சார வாகனங்கள் மற்றும் அலுவலகங்களை இயக்குவதற்கும், 2030ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்குகளை எட்டுவதற்கும் முக்கியமானவை.

ஃபோனை இணைக்கும் கேபிள், சர்க்யூட்போர்டு, பேட்டரி மற்றும் கேசிங் ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தொலைபேசியின் பிற பாகங்களிலும் நிக்கல் காணப்படுகிறது. இது மருத்துவ உபகரணங்கள் உட்பட பல தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஃபோனின் பேட்டரி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனநலப் பிரச்னைகளுக்கான சிகிச்சையில் மனப்பாங்கை சீராக்கும் மருந்தாகவும் லித்தியம் பயன்படுகிறது.

ஃபோனின் பேட்டரி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மறுமுறை சார்ஜ் செய்து பயன்படுத்தும் பேட்டரிகளில் கோபால்ட் முக்கிய கனிமமாக பயன்படுத்தப்படுகிறது. இது நகைகளிலும் காணப்படுகிறது.

நாம் ஏன் பேட்டரிகளில் கவனம் செலுத்துகிறோம்? ஏனெனில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்த மூன்று கனிமங்களும் ஒவ்வொரு நாடுகளுக்கும் முக்கியமானவை.

சூரிய ஒளித்தகடுகள் பொருத்தப்பட்ட வீட்டின் முன்பு மின்சாரத்தில் இயக்கும் காரின் பேட்டரிக்கு சார்ஜ் ஏறுகிறது. அருகிலேயே சூரிய ஒளி ஆற்றல் மற்றும் காற்றாலை ஆலை.

மின்சார வாகனங்களில் இருக்கும் கார் பேட்டரிகளை உருவாக்கவே இந்த முக்கிய கனிமங்கள் அதிகமாக தேவைப்படுகின்றன.

2020ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் விற்கப்படும் புதிய வாகனங்களில் 25இல் ஒன்று மின்சார வாகனமாக இருக்கும் என்று சர்வதேச ஆற்றல் நிறுவனம் (IEA) கூறுகிறது. இந்த ஆண்டு, ஐந்தில் ஒன்றாக அது இருக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.

புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்தும் எஞ்சின்களை விட பசுமை ஆற்றல் வழியாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தும் மின்சார வாகனங்கள் நான்கு மடங்கு அல்லது அதற்கு அதிகளவில் சுத்தமானவை என்று IEA கூறுகிறது.

சூரிய ஒளித்தகடுகள், மின்சார வாகனங்கள் மற்றும் காற்றாலை மின்சாரம் போன்ற பசுமை தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் இந்த முக்கிய கனிமங்கள் தேவைப்படுகின்றன.

அடுத்த 20 ஆண்டுகளில் மின்சார வாகனங்கள் மற்றும் மின்கலன் சேமிப்பு ஆகியவற்றில் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும். எனவே இந்த கனிமங்கள் நமக்கு நிறைய தேவைப்படும்.

முக்கிய கனிமங்களுக்கான தேவையைப் பார்க்கலாம்.

நிகர பூஜ்ஜியத்தை இலக்காகக் கொள்ளும்போது கனிமங்களில் தேவை எப்படி மாறும்? (நிகர பூஜ்யம் என்பது வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் மொத்த அளவை அதிகரிக்காமல் பயன்படுத்தும் ஆற்றல் பயன்பாடு)

நிக்கல்: 2022இல் தேவை, 3,200 கிலோ டன்; 2030இல் பூஜ்ஜிய உமிழ்வு, 5,700 கிலோ டன்; 2030இல் எதிர்ப்பார்க்கப்படும் விநியோகம், 4,140 கிலோ டன்.

இந்தச் சுரங்கம் நமக்குத் தேவையான கனிமங்களின் அளவைக் குறிக்கிறது (ஸ்கேலின் அளவில் வரையப்படவில்லை).

கடந்த ஆண்டு உலகளவில் பயன்படுத்தப்பட்ட நிக்கலின் அளவு: 3,200 கிலோ டன் (அது 32 லட்சம் கார்களின் எடைக்கு சமமாகும்)

2030ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய, நமக்கு 5,700 கிலோ டன் நிக்கல் தேவைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது.

ஆனால் நிக்கலுக்கான மதிப்பிடப்பட்டுள்ள விநியோகம் 4,140 கிலோ டன் மட்டுமே. அது 2030இல் நிகர பூஜ்ஜிய உமிழ்வுக்கான இலக்கை அடைய தேவைப்படும் எண்ணிக்கையை விட குறைவு.

லித்தியம் மற்றும் கோபால்ட் குறித்து பார்க்கலாம்.

லித்தியம்: 2022இல் தேவை, 146 கிலோ டன்; 2030இல் பூஜ்ஜிய உமிழ்வு, 702 கிலோ டன்; 2030இல் எதிர்ப்பார்க்கப்படும் விநியோகம், 420 கிலோ டன்.

லித்தியம்: 2022இல் தேவை, 146 கிலோ டன்; 2030இல் பூஜ்ஜிய உமிழ்வு, 702 கிலோ டன்; 2030இல் எதிர்ப்பார்க்கப்படும் விநியோகம், 420 கிலோ டன்.

2030ம் ஆண்டுக்குள், புவி வெப்பமடைதலை 1.5 செல்சியஸ் ஆகக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், லித்தியம் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்.

கோபால்ட்: 2022இல் தேவை, 200 கிலோ டன்; 2030இல் பூஜ்ஜிய உமிழ்வு, 346 கிலோ டன்; 2030இல் எதிர்ப்பார்க்கப்படும் விநியோகம், 314 கிலோ டன்.

கோபால்ட்: 2022இல் தேவை, 200 கிலோ டன்; 2030இல் பூஜ்ஜிய உமிழ்வு, 346 கிலோ டன்; 2030இல் எதிர்ப்பார்க்கப்படும் விநியோகம், 314 கிலோ டன்.

2030ம் ஆண்டுக்குள், புவி வெப்பமடைதலை 1.5 செல்சியஸ் ஆகக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், கோபால்ட் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும்.

உலகெங்கிலும் இந்த கனிமங்களுக்கான சுரங்கம் எங்கு உள்ளது என பார்க்கலாம்.

டி ஆர் காங்கோ, கோபால்ட்: 74%; இந்தோனீசியா, நிக்கல் 49%;ஆஸ்திரேலியா, லித்தியம் 47%

2022 ஆம் ஆண்டில், இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உலகின் மூன்றில் இரண்டு பங்கு நிக்கல் கனிமத்தை வெட்டியெடுத்தன.

ஆஸ்திரேலியா, சிலே மற்றும் சீனா ஆகிய நாடுகள் உலகின் 91% லித்தியம் கனிமத்தை வெட்டியெடுக்கின்றன.

காங்கோ ஜனநாயகக் குடியரசு (டி ஆர் காங்கோ), ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகள் உலகின் 82% கோபால்ட் கனிமத்தை வெட்டியெடுத்தன.

டி ஆர் காங்கோ, கோபால்ட்: 74%; இந்தோனீசியா, நிக்கல் 49%;ஆஸ்திரேலியா, லித்தியம் 47%

முக்கிய கனிமங்களின் சுரங்கம் ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிக அளவில் உள்ளன. ஒவ்வொரு கனிமத்தையும் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள் இவை.

இந்த கனிமங்கள் கையாளுப்படுவது எங்கே?

சீனா, கோபால்ட் 74%, லித்தியம் 65%; இந்தோனீசியா, நிக்கல் 43%

கனிமங்களை கையாளுவது, அவற்றை வெட்டியெடுப்பதை விட புவியியல் ரீதியாக குறிப்பிட்ட இடங்களில் அதிகமாக இருக்கிறது.

சீனா, கோபால்ட் 74%, லித்தியம் 65%; இந்தோனீசியா, நிக்கல் 43%

லித்தியம், கோபால்ட் ஆகிய கனிமங்களை சீனா அதிகளவில் கையாளுகிறது. இந்தோனீசியா நிக்கல் கனிமத்தை அதிகளவில் கையாளுகிறது.

சீனா, கோபால்ட் 74%, லித்தியம் 65%, நிக்கல் 17%.

சீனா, கோபால்ட் 74%, லித்தியம் 65%, நிக்கல் 17%.

நவீன தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் அருமண் தனிமங்களில் 90% தனிமங்களை சீனா கையாளுகிறது.

அத்தியாவசிய வளங்களின் விநியோகம் மற்றும் வர்த்தக தடங்களை முறையாக பன்முகப்படுத்த தவறியதால் ஏற்பட்ட அபாயங்களை வரலாறு நமக்கு காட்டியுள்ளது.
டிம் கோல்ட், IEA

அத்தியாவசிய வளங்களின் விநியோகம் மற்றும் வர்த்தக தடங்களை முறையாக பன்முகப்படுத்த தவறியதால் ஏற்பட்ட அபாயங்களை வரலாறு நமக்கு காட்டியுள்ளது.

டிம் கோல்ட், IEA

சிலேவிலுள்ள லித்தியம் சுரங்கத்தில் கனிமம் வெட்டியெடுக்கப்பட்ட பிறகு அதன் துணை விளைபொருளை சுரங்க இயந்திரம் நகர்த்துகிறது.
சிலேவிலுள்ள லித்தியம் சுரங்கம்

சிலேவிலுள்ள லித்தியம் சுரங்கத்தில் கனிமம் வெட்டியெடுக்கப்பட்ட பிறகு அதன் துணை விளைபொருளை சுரங்க இயந்திரம் நகர்த்துகிறது.

சிலேவிலுள்ள லித்தியம் சுரங்கம்

இந்த முக்கிய கனிமங்களை விநியோகம் செய்வதில் உள்ள தடைகள் என்னென்ன?

ஒரு சுரங்கத்தை நிறுவ குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை ஆகக்கூடும். ஆனால் 2030இல் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய இன்னும் 7 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ளது.

டி ஆர் காங்கோவில் உள்ள கோபால்ட் சுரங்கத்தில் மிகவும் மோசமான பணி சூழலில் ஒரு பெண் வேலை செய்கிறார்.
டி ஆர் காங்கோவிலுள்ள கோபால்ட் சுரங்கம்

டி ஆர் காங்கோவில் உள்ள கோபால்ட் சுரங்கத்தில் மிகவும் மோசமான பணி சூழலில் ஒரு பெண் வேலை செய்கிறார்.

டி ஆர் காங்கோவிலுள்ள கோபால்ட் சுரங்கம்

கனிமங்களின் புதிய இருப்பு கண்டுபிடிக்கப்படும் போது, அவற்றை வெட்டியெடுத்து கொண்டு செல்வதற்கான சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உங்களிடம் இல்லாமல் இருக்கலாம்.

உள்ளூர் மக்களை உள்ளடக்கி, நியாயமான மற்றும் சமமான முறையில் கனிமங்கள் பிரித்தெடுக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்பதால் புதிய சுரங்கங்கள் பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.

டி ஆர் காங்கோவில், கோபால்ட் மற்றும் தாமிரச் சுரங்க விரிவாக்க பணிகளின் போது அங்கிருந்த உள்ளூர் மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வெளியேற்றும் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்தது.
அம்னெஸ்டி இண்டெர்நேசனல்

சுழல் பொருளாதாரம், ஆற்றலை உற்பத்தி செய்து பேட்டரியில் சேமித்து அதை பயன்படுத்திய பின்னர் பேட்டரியை மறுசுழற்சி செய்வது.

காலப்போக்கில் பேட்டரிகளும் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும்.

பெரும்பாலான மின்சார வாகனங்களின் பேட்டரிகள் 20 ஆண்டுகளுக்குள் மாற்றப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

தற்போது பயன்பாட்டிலுள்ள பேட்டரிகளில் பாதிக்கும் குறைவானவற்றை மட்டுமே மறுசுழற்சி செய்ய முடியும் என்று இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதில் 80% அடுத்த இரண்டு தசாப்தங்களுக்குள் மறுசுழற்சி செய்யப்படலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

மறுசுழற்சி செய்வதை எளிதாக்கும் வகையில், பேட்டரிகளை உருவாக்குவது குறித்து நாம் பரிசீலனை செய்ய வேண்டும்.
பேராசிரியர் பால் ஆண்டர்சன், பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், ஐக்கிய ராஜ்ஜியம்

மறுசுழற்சி செய்வதை எளிதாக்கும் வகையில், பேட்டரிகளை உருவாக்குவது குறித்து நாம் பரிசீலனை செய்ய வேண்டும்.

பேராசிரியர் பால் ஆண்டர்சன், பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், ஐக்கிய ராஜ்ஜியம்

நாங்கள் தயாரிக்கும் பேட்டரிகளின் அளவுக்கு இணையாக அவற்றை நம்மால் மறுசுழற்சி செய்ய முடியாது. நாம் எதிர்பார்க்கும் எண்ணிக்கையிலான பேட்டரிகளை தயாரிக்க போதுமான கனிமங்களும் இப்போதுவரை தோண்டப்படவில்லை.