எளிமை, இயல்பு, ஆரவாரமில்லாதது: ஒலிம்பிக் மாரத்தான் சாம்பியன்களை தூண்டும் உணவு

"மாரத்தான் கிட்டத்தட்ட ஒலிம்பிக்கிற்கு ஒத்ததாக இருக்கிறது, இது 1896ஆம் ஆண்டு நவீன விளையாட்டுகள் தொடங்கியதில் இருந்து அதன் அங்கமாக இருக்கிறது. 42.2 கி.மீட்டர் தூரத்தை வேகமாக கடக்க தங்களின் அதிகபட்ச சக்தியை வீரர்கள் வெளியிடுவது, நீடித்த உச்சபட்ச நிகழ்வுகளில் ஒன்று,

ஆனால் இதற்கு சரியாக எவ்வளவு சக்தி தேவை? மேம்பட்ட விளையாட்டு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து சகாப்தத்தில், சாம்பியன்களைத் தூண்டும் உணவுகள் எவை?

கென்யாவைச் சேர்ந்த வீரர் எலியூட் கிப்ட்ச்சோக்கே மற்றும் வீராங்கனை பிரிட்ஜிட் கோஸ்கேவிடம் இதற்கான விடையை கண்டுபிடிப்போம்.

டோக்கியோ விளையாட்டுகளுக்காக பயிற்சி எடுக்கும் வேளையில், அவர்களின் உணவுப் பழக்கத்தை அறிவதற்காக அவர்களைச் சந்தித்தோம்."

இந்த தகவலை ஸ்க்ரோல் செய்து ஹைலைட் செய்யப்பட்ட வார்த்தைகளில் கிளிக் செய்தால் பிரிட்ஜிட் மற்றும் எலியூட்டை தூண்டச் செய்யும் சக்தி நிறைந்த சில வகை உணவு மற்றும் பானங்களை அறியலாம்.

ஒரு கப் தேநீர் (3 ஸ்பூன் சர்க்கரை = 90 கி.கலோரி

ஒரு மாரத்தானாக வியர்வை சிந்தி உழைக்க வேண்டும். எனவே சில வகை பானங்களுடன் தொடருவோம். இது கென்யா என்பதால் தேநீர் நிச்சய தேர்வாகும். சிறிதளவு சர்க்கரை சேர்ப்பது வீரர்களுக்கு ஆரம்பநிலை தடங்கலை முறியடிக்க உதவும்.

பல கென்ய வீரர்கள் இனிப்பு கலந்த பானம் பருகுவதை விரும்புவர். இவர்களின் உணவு பழக்கமுறையில் காணப்படும் கார்போஹைட்ரேட்டில் ஐந்தில் ஒரு பங்கு, சர்க்கரை உள்ளது என்கிறது ஓர் ஆய்வு.

ஆச்சரியமூட்டும் வகையில் பயிற்சியின்போது குடிநீரை விட தேநீரையே சில வீரர்கள் பருகுகின்றனர். பந்தயத்தை 450 கி.கலோரி நிறைந்த ஐந்து கப் தேநீருடன் நாமும் துவக்குவோம்.

5 கப் தேநீர் = 450 கி. கலோரி

15 ஸ்பூன் சர்க்கரை அதிகம் என்றாலும், கடக்க வேண்டிய தூரம் அதிகம்.

நமது வீரர்களுக்கு சரியான உணவை வழங்க நேரம் வந்து விட்டது.

1 பிடி உகாலி (மாவுச்சத்து உணவு) = 220 கி. கலோரி

முதலாவது சரியான தேர்வு , இது மக்காச்சோள மாவிலிருந்து தயாரிக்கப்பட்டு கஞ்சி போல சமைக்கப்படும் கிழக்கு ஆப்பிரிக்காவின் பிரதான உணவு.

"இது மிக எளிமையான உணவாக இருக்கலாம், ஆனால் கென்யாவின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்களின் சக்தியை நீடிக்கச் செய்து, மொத்த கலோரி அளவில் கால் பகுதியை வழங்கும் தன்மை கொண்டது."

டோக்கியோவில் இவர்களின் உணவுப்பழக்கம் மேம்பட வேண்டும். இது பற்றி பிரிட்ஜிட் கூறுகையில், "கென்யாவில் பயன்பாட்டில் இருப்பது போல உகாலி மற்ற நாடுகளில் கிடைப்பதில்லை.அனேகமாக நாங்கள் அரிசி, ஸ்பகெட்டி அல்லது கோழி மற்றும் மீன் சாப்பிடலாம்," என்றார்.

ஆனால் விருப்ப உணவை எடுத்துக் கொள்வதாக இருந்தால், இவர்கள் வழக்கமாக உட்கொள்ளும் அளவு போதுமானதாக இருக்காது. அதனால் இரண்டு பங்கு சாப்பிட வேண்டும்.

2 சேவை உகாலி = 440 கி.கலோரி

உகாலி நல்லது, ஆனால் எங்களுக்கான சக்தி இலக்கை எட்டக்கூடிய தூரத்தில் நாங்கள் இல்லை.

நிச்சயமாக கஞ்சியை மட்டும் சாப்பிட முடியாது, எனவே மெனுவில் வேறு என்ன சேர்க்கலாம் என்று பார்ப்போம்.

1 சேவை மாட்டிறைச்சி: 190 கி.கலோரி

இறைச்சி நிச்சயமாக உதவும். ஆனால், இது வெறும் சிறிய முன்னேற்றம் மட்டுமே.

மாட்டிறைச்சி சிறந்த புரத ஆதாரம். பல முன்னணி கென்ய வீரர்கள், பால் மற்றும் பீன்ஸில் இருந்து சக்தியை பெறுகிறார்கள். எனவே அதன் கலவையை சேர்ப்போம்.

2 கப் பால் = 320 கி.கலோரி

பால், அத்தியாவசிய பங்கு வகிக்கிறது. இஞ்சி, மசாலா கலந்த வெள்ளை தேநீராக அது இருக்கும். எனவே வீரர்கள் பருக இரண்டு கப் தேநீரை தயாரிப்போம். அது 320 கி.கலோரிக்கு ஒப்பானது.

எலியூட்டுக்கு மற்றொரு உள்ளூர் பானம் விருப்பம். முர்சிக் எனப்படும் புளித்த பால், தன்னைப் பொருத்தவரை விளையாட்டில் முக்கியமானது என்கிறார் எலியூட். அதை பருகினால், ஜீரண சக்தியை வேகப்படுத்தும் என்கிறார் அவர்.

ஒரு சேவை சிவப்பு காராமணி = 120 கி.கலோரி

காராமணியைப் பொருத்தவரை, ஒரு சேவை சிவப்பு காராமணியை உகாலியுடன் எடுத்துக் கொண்டால் அது கூடுதலாக 120 கி.கலோரி சக்தியைத் தரும். ஒரு வேலைக்கு 120 கி.கலோரி கூடுவது நம்பமுடியாத அளவு. இருந்தாலும் நமக்கு இது போதாது. எனவே உருளைக்கிழங்குகளைச் சேர்ப்போம்.

கென்யாவின் முன்னணி தடகள வீரர்கள், ஏராளமான அரசி, உருளைக்கிழங்கு, பிரெட் சாப்பிடுவார்கள். தேவைப்படும் கலோரிகளில் கால்பங்கும், சுமார் மூன்று பங்கு கார்போஹைட்ரேட்டும் இந்த கலவையான உணவு வகைகளில் இருந்து கிடைக்கும். மணிக்கணக்கில் ஓடும் நமது மாரத்தான் வீரர்களுக்கு சக்தி கிடைக்க இவை போதுமானது.

2 சேவை அரிசி, 1 சேவை வேகவைத்த இனிப்பு உருளைக்கிழங்குகள் = 510 கலோரிகள்

இரு சேவை அரிசி, ஒரு சேவை வேக வைத்த உருளைக்கிழங்குகள் எந்த அளவுக்கு பயன் தரும் என பார்ப்போம்.

இதே அளவு நமது வீராங்கனைகள், அவர்களின் மாரத்தானை நிறைவு செய்ய போதுமா? ஆமாம்!

பிரிட்ஜிட் கோஸ்கேவுக்கான நிறைவுக்கோடு

பிரிட்ஜிட் 2019 சிகாகோ மாரத்தானில் வென்றபோது சுமாராக 1,666 கி.கலோரி எடுத்திருந்தார்.

நடைமுறையில், ஒரு சராசரி பெண்ணுக்கு பரிந்துரைக்கப்படும் அளவில் கிட்டத்தட்ட அனைத்து சக்தியையும் அவர் செலவிட்டார். அதுவும் 2 மணி 14 நிமிடங்களில்.

இப்போது, எலியூட் கிப்ட்ச்சோக்கே பக்கம் திரும்புவோம். எடை கூடியிருந்தாலும், பிரிட்ஜிட்டை விட சிறிது வேகமாக ஓடக்கூடியவர். எனவே, வெற்றிக்கோட்டை எட்ட, எலியூட்டுக்கு மேலதிக சக்தி தேவை.

எனவே சாதாரண உணவு வகைகளுடன் வறுத்த முட்டைகள், முட்டை கோஸ், சில உள்ளூர் கீரை வகைகளை சேர்த்து அவரை உற்சாகப்படுத்துவோம்.

2 வேக வைத்த முட்டைகள், 1 சேவை ஆப்பிரிக்க மனகு கீரை, ஒரு சேவை சுக்குமாந்தடி, வேகவைத்த ஒரு முட்டை கோஸ் = 260 கி. கலோரி

இரண்டு முட்டைகள், சில வகை காய்கறி கலவைகளுடன் சேர்த்து எலியூட்டுக்கு கூடுதலாக 260 கி.கலோரி கிடைக்கிறது.

சுவாரஸ்யமான பொருட்களாக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தொடங்கி பிற மசாலா கலந்த பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

இதில் கிழக்கு ஆப்பிரிக்காவில் அதிகம் கிடைக்கும் என்ற ஜாதிபத்திரி வகை மசாலா அடங்கும்.

"பல்பொருள் அங்காடிகளில் நாங்கள் காய்கறிகளை வாங்குவதில்லை. முட்டைகோஸ், பசலைக்கீரை போன்றவை நாங்கள் வழக்கமாக விளைவிக்கும் பொருட்கள். ஏனென்றால் எங்களுடைய நிலம் வளம் சார்ந்தது. எவ்வித ரசாயனத்தையும் பயன்படுத்துவதில்லை," என்று பிரிட்ஜிட் பிபிசியிடம் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட நிறைவுக்கட்டத்தை எட்டி விட்டோம்! இப்போது நமக்கு தேவை வெற்றிக்கோட்டை எட்டுவதற்கான நொறுக்குத்தீனிகள்.

1 வாழைப்பழம் = 100 கி.கலோரி

மற்ற அனைவரை போல, முன்னணி தடகள வீரர்களுக்கும் ஸ்நாக்ஸ் பிடிக்கும். அதுவும் உள்ளூரில் பலரது தேர்வு பழங்கள் ஆக இருக்கும்.

"எனக்கு, குறிப்பாக எனக்கு, வெவ்வேறு வகை பழங்களை ஸ்நாக்ஸ் போல சாப்பிட பிடிக்கும்," எனும் பிரிட்ஜிட். "இன்று அது வாழைப்பழமாக இருக்கலாம். நாளை தர்பூசணி, அதற்கு மறுநாள் ஆரஞ்சு, பிறகு மாங்காய் என மாறும்," என்கிறார்.

"அரிய மென் பானங்கள் மீது அளாதியான விருப்பம் உண்டு," என அவர் ஒப்புக்கொள்கிறார்.

ஆனால், இப்போதைக்கு ஆரோக்கியம் பக்கம் கவனம் செலுத்துவோம். 100 கி.கலோரி எடை உள்ள வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வோம்.

எலியூட் கிப்ட்ச்சோக்கேவின் வெற்றிக்கோடு

2,322 கி.கலோரி அளவை கடைசியில் நாம் எட்டி விட்டோம். 2018இல் உலக சாதனை படைத்தபோது இவர் செலவிட்ட சக்தியின் அளவு இது.

நம்ப முடியாத வகையில், சராசரி ஆடவரின் முழு நாள் தேவைக்கான 2,500 கி.கலோரியை வெறும் 2 மணி 1 நிமிடம் 39 நொடிகளில் இவர் செலவிட்டார்.

இதை பாருங்கள்! தனக்கு தேவைப்படும் சக்திக்கான கார்போஹைட்ரேட், கலோரிகளை எப்படி இவர் பேக்கிங் செய்கிறார் என்று.

சிந்தனைக்கான உணவு

எலியூட் கிப்ட்ச்சோக்கே மற்றும் பிரிட்ஜிட் கோஸ்கே டோக்கியோ 2020 என்ற பெரிய தளத்தில் போட்டியிடுகிறார்கள்.

கிழக்கு ஆப்பிரிக்காவின் தடகள வீரர்களே சமீபத்திய ஆண்டுகளாக ஒலிம்பிக் மாரத்தான்களில் ஆதிக்கம் செலுத்தினார்கள். உடல் கட்டமைப்பு, உயர் செங்குத்தான பகுதி மற்றும் கரடு முரடான பள்ளத்தாக்குகளில் பயிற்சி போன்றவை உணவு பழக்கத்துடன் சேர்ந்து இவர்களின் வெற்றிக்கு சாத்தியமான பங்களிப்பை வழங்கியுள்ளன.

எலியூட் நம்மிடம், "சரியான, அளவான உணவு முறைதான் தடகள வீரரின் துறவுகோல்," என்றார். "தடகள வீரராக இருப்பது ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்வது போன்றது. கைகளைக் கொண்டு சிமென்ட் கலவையை கட்டடம் முழுவதும் பூசுவது போன்றது. எனவே நீங்கள் சாப்பிடும் வகைகள், உடல் முழுவதும் சக்தியை பரவக் கூடியதாக இருக்க வேண்டும்," என்றார் எலியூட்.

உணவு அறிவியல், இலக்கு சார்ந்த ஊட்டச்சத்து தயாரிப்புகளை முன்னணி வீரர்கள் நம்பியிருக்கும் உலகில், சில முன்னணி சாதனையாளர்கள் எளிமையான மற்றும் இயற்கையான உணவு வகை மூலம் தங்களின் சக்தியை அதிகப்படுத்தி வருவது இங்கே சிந்திக்கத்தக்கது.

கப் தேநீர்

கப் தேநீர் கப் தேநீர் கப் தேநீர் கப் தேநீர் கப் தேநீர்

5 கப் தேநீர் = 450 கி. கலோரி

15 ஸ்பூன் சர்க்கரை அதிகம் என்றாலும், கடக்க வேண்டிய தூரம் அதிகம்.

நமது வீரர்களுக்கு சரியான உணவை வழங்க நேரம் வந்து விட்டது.

ஒரு பிளேட் உகாலி

1 பிடி உகாலி (மாவுச்சத்து உணவு) = 220 கி. கலோரி

முதலாவது சரியான தேர்வு , இது மக்காச்சோள மாவிலிருந்து தயாரிக்கப்பட்டு கஞ்சி போல சமைக்கப்படும் கிழக்கு ஆப்பிரிக்காவின் பிரதான உணவு.

"இது மிக எளிமையான உணவாக இருக்கலாம், ஆனால் கென்யாவின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்களின் சக்தியை நீடிக்கச் செய்து, மொத்த கலோரி அளவில் கால் பகுதியை வழங்கும் தன்மை கொண்டது."

டோக்கியோவில் இவர்களின் உணவுப்பழக்கம் மேம்பட வேண்டும். இது பற்றி பிரிட்ஜிட் கூறுகையில், "கென்யாவில் பயன்பாட்டில் இருப்பது போல உகாலி மற்ற நாடுகளில் கிடைப்பதில்லை.அனேகமாக நாங்கள் அரிசி, ஸ்பகெட்டி அல்லது கோழி மற்றும் மீன் சாப்பிடலாம்," என்றார்.

ஆனால் விருப்ப உணவை எடுத்துக் கொள்வதாக இருந்தால், இவர்கள் வழக்கமாக உட்கொள்ளும் அளவு போதுமானதாக இருக்காது. அதனால் இரண்டு பங்கு சாப்பிட வேண்டும்.

ஒரு பிளேட் உகாலி ஒரு பிளேட் உகாலி

2 சேவை உகாலி = 440 கி.கலோரி

உகாலி நல்லது, ஆனால் எங்களுக்கான சக்தி இலக்கை எட்டக்கூடிய தூரத்தில் நாங்கள் இல்லை.

நிச்சயமாக கஞ்சியை மட்டும் சாப்பிட முடியாது, எனவே மெனுவில் வேறு என்ன சேர்க்கலாம் என்று பார்ப்போம்.

மாட்டிறைச்சி

1 சேவை மாட்டிறைச்சி: 190 கி.கலோரி

இறைச்சி நிச்சயமாக உதவும். ஆனால், இது வெறும் சிறிய முன்னேற்றம் மட்டுமே.

மாட்டிறைச்சி சிறந்த புரத ஆதாரம். பல முன்னணி கென்ய வீரர்கள், பால் மற்றும் பீன்ஸில் இருந்து சக்தியை பெறுகிறார்கள். எனவே அதன் கலவையை சேர்ப்போம்.

கப் பால்

2 கப் பால் = 320 கி.கலோரி

பால், அத்தியாவசிய பங்கு வகிக்கிறது. இஞ்சி, மசாலா கலந்த வெள்ளை தேநீராக அது இருக்கும். எனவே வீரர்கள் பருக இரண்டு கப் தேநீரை தயாரிப்போம். அது 320 கி.கலோரிக்கு ஒப்பானது.

எலியூட்டுக்கு மற்றொரு உள்ளூர் பானம் விருப்பம். முர்சிக் எனப்படும் புளித்த பால், தன்னைப் பொருத்தவரை விளையாட்டில் முக்கியமானது என்கிறார் எலியூட். அதை பருகினால், ஜீரண சக்தியை வேகப்படுத்தும் என்கிறார் அவர்.

சிவப்பு காராமணி

ஒரு சேவை சிவப்பு காராமணி = 120 கி.கலோரி

காராமணியைப் பொருத்தவரை, ஒரு சேவை சிவப்பு காராமணியை உகாலியுடன் எடுத்துக் கொண்டால் அது கூடுதலாக 120 கி.கலோரி சக்தியைத் தரும். ஒரு வேலைக்கு 120 கி.கலோரி கூடுவது நம்பமுடியாத அளவு. இருந்தாலும் நமக்கு இது போதாது. எனவே உருளைக்கிழங்குகளைச் சேர்ப்போம்.

கென்யாவின் முன்னணி தடகள வீரர்கள், ஏராளமான அரசி, உருளைக்கிழங்கு, பிரெட் சாப்பிடுவார்கள். தேவைப்படும் கலோரிகளில் கால்பங்கும், சுமார் மூன்று பங்கு கார்போஹைட்ரேட்டும் இந்த கலவையான உணவு வகைகளில் இருந்து கிடைக்கும். மணிக்கணக்கில் ஓடும் நமது மாரத்தான் வீரர்களுக்கு சக்தி கிடைக்க இவை போதுமானது.

சாதம் சாதம் இனிப்பு உருளைக்கிழங்குகள்

2 சேவை அரிசி, 1 சேவை வேகவைத்த இனிப்பு உருளைக்கிழங்குகள் = 510 கலோரிகள்

இரு சேவை அரிசி, ஒரு சேவை வேக வைத்த உருளைக்கிழங்குகள் எந்த அளவுக்கு பயன் தரும் என பார்ப்போம்.

இதே அளவு நமது வீராங்கனைகள், அவர்களின் மாரத்தானை நிறைவு செய்ய போதுமா? ஆமாம்!

பிரிட்ஜிட் கோஸ்கேவை

பிரிட்ஜிட் கோஸ்கேவுக்கான நிறைவுக்கோடு

பிரிட்ஜிட் 2019 சிகாகோ மாரத்தானில் வென்றபோது சுமாராக 1,666 கி.கலோரி எடுத்திருந்தார்.

நடைமுறையில், ஒரு சராசரி பெண்ணுக்கு பரிந்துரைக்கப்படும் அளவில் கிட்டத்தட்ட அனைத்து சக்தியையும் அவர் செலவிட்டார். அதுவும் 2 மணி 14 நிமிடங்களில்.

இப்போது, எலியூட் கிப்ட்ச்சோக்கே பக்கம் திரும்புவோம். எடை கூடியிருந்தாலும், பிரிட்ஜிட்டை விட சிறிது வேகமாக ஓடக்கூடியவர். எனவே, வெற்றிக்கோட்டை எட்ட, எலியூட்டுக்கு மேலதிக சக்தி தேவை.

எனவே சாதாரண உணவு வகைகளுடன் வறுத்த முட்டைகள், முட்டை கோஸ், சில உள்ளூர் கீரை வகைகளை சேர்த்து அவரை உற்சாகப்படுத்துவோம்.

வேக வைத்த முட்டை வேக வைத்த முட்டை மனகு கீரை முட்டைகோஸ்

2 வேக வைத்த முட்டைகள், 1 சேவை ஆப்பிரிக்க மனகு கீரை, ஒரு சேவை சுக்குமாந்தடி, வேகவைத்த ஒரு முட்டை கோஸ் = 260 கி. கலோரி

இரண்டு முட்டைகள், சில வகை காய்கறி கலவைகளுடன் சேர்த்து எலியூட்டுக்கு கூடுதலாக 260 கி.கலோரி கிடைக்கிறது.

சுவாரஸ்யமான பொருட்களாக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தொடங்கி பிற மசாலா கலந்த பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

இதில் கிழக்கு ஆப்பிரிக்காவில் அதிகம் கிடைக்கும் என்ற ஜாதிபத்திரி வகை மசாலா அடங்கும்.

"பல்பொருள் அங்காடிகளில் நாங்கள் காய்கறிகளை வாங்குவதில்லை. முட்டைகோஸ், பசலைக்கீரை போன்றவை நாங்கள் வழக்கமாக விளைவிக்கும் பொருட்கள். ஏனென்றால் எங்களுடைய நிலம் வளம் சார்ந்தது. எவ்வித ரசாயனத்தையும் பயன்படுத்துவதில்லை," என்று பிரிட்ஜிட் பிபிசியிடம் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட நிறைவுக்கட்டத்தை எட்டி விட்டோம்! இப்போது நமக்கு தேவை வெற்றிக்கோட்டை எட்டுவதற்கான நொறுக்குத்தீனிகள்.

வாழைப்பழம்

1 வாழைப்பழம் = 100 கி.கலோரி

மற்ற அனைவரை போல, முன்னணி தடகள வீரர்களுக்கும் ஸ்நாக்ஸ் பிடிக்கும். அதுவும் உள்ளூரில் பலரது தேர்வு பழங்கள் ஆக இருக்கும்.

"எனக்கு, குறிப்பாக எனக்கு, வெவ்வேறு வகை பழங்களை ஸ்நாக்ஸ் போல சாப்பிட பிடிக்கும்," எனும் பிரிட்ஜிட். "இன்று அது வாழைப்பழமாக இருக்கலாம். நாளை தர்பூசணி, அதற்கு மறுநாள் ஆரஞ்சு, பிறகு மாங்காய் என மாறும்," என்கிறார்.

"அரிய மென் பானங்கள் மீது அளாதியான விருப்பம் உண்டு," என அவர் ஒப்புக்கொள்கிறார்.

ஆனால், இப்போதைக்கு ஆரோக்கியம் பக்கம் கவனம் செலுத்துவோம். 100 கி.கலோரி எடை உள்ள வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வோம்.

சாலையில் ஓட்டப்பயிற்சியில் எலியூட் கிப்ட்ச்சோக்கே மற்றும் பிரிட்ஜிட் கோஸ்கே

எலியூட் கிப்ட்ச்சோக்கேவின் வெற்றிக்கோடு

2,322 கி.கலோரி அளவை கடைசியில் நாம் எட்டி விட்டோம். 2018இல் உலக சாதனை படைத்தபோது இவர் செலவிட்ட சக்தியின் அளவு இது.

நம்ப முடியாத வகையில், சராசரி ஆடவரின் முழு நாள் தேவைக்கான 2,500 கி.கலோரியை வெறும் 2 மணி 1 நிமிடம் 39 நொடிகளில் இவர் செலவிட்டார்.

இதை பாருங்கள்! தனக்கு தேவைப்படும் சக்திக்கான கார்போஹைட்ரேட், கலோரிகளை எப்படி இவர் பேக்கிங் செய்கிறார் என்று.

வாழைப்பழம் வேக வைத்த முட்டை வேக வைத்த முட்டை மனகு கீரை முட்டைகோஸ் சிவப்பு காராமணி